இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய கத்திரி வெயில், தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
வரும் 28ஆம் திகதியோடு அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில், வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டுகிறது. அத்துடன் அனல் காற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் வெயில் வாட்டுகிறது.
நேற்று முன்தினம், ம.பி. மாநிலம், கஜுராஹோவில் அதிகபட்சமாக, 46.7 டிகிரி செல்சியசாகவும், தலைநகர் போபாலில், 44.3 டிகிரி செல்சியசாகவும், வெப்பநிலை பதிவானது.
அங்கு நிலவும் கடும் வெப்பம் காரணமாக 50 வயது முதியவர், 26 வயது இளைஞர் மற்றும் பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த, பயிற்சி காவலர் உட்பட மூன்று பேர் பலியாயினர்.
அம்மாநிலங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
.newindianews thanks |
No comments:
Post a Comment