மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், வேணல் கினாவுகல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து கொச்சி பொலிஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம்(33) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஞ்சு அரவிந்தின் மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பலமுறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பியுள்ளார்.
இதற்கு அஞ்சு அரவிந்த் பலமுறை எச்சரிக்கை விடுத்து பதில் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அசீம், அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங் களை வெளியிட்டது தெரிந்தது.
இதனையடுத்து அசீமை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், சிறையில் அடைத்தனர்.
newindianews thanks |
No comments:
Post a Comment