: 18 May 2013
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது.
கீழக்கரை நகராட்சியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிந்தன. இவற்றில் சில நாய்கள் தெருக்களில் நடந்து செல்பவர்களை கடிப்பதாகவும், இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாகவும், கீழக்கரை நகராட்சிக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்பையில் கீழக்கரையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியில் தேவகோட்டை விவேகா அறக்கட்டளையினரும், நகராட்சிப் பணியாளர்களும் ஈடுபட்டு நகரில் சுற்றித் திரிந்த ஏராளமான நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவர் நிசார்ச் தலைமையில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சையும், வெறித் தன்மையை குறைப்பதற்கான ஊசியும் போடப்பட்டன.
dinamani thanks
No comments:
Post a Comment