அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் வழக்கம் போல தண்ணீர் சப்ளை


கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் வழக்கம் போல தண்ணீர் சப்ளை
சென்னை, மே.19-

கேன் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்குவதற்காகவும், போலி குடிநீர் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்று தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒரு சில கேன் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களை மூடி சீல் வைத்தது. இதனை கண்டித்து கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு கேன் குடிநீர் கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் அதன் விலையும் உயர்ந்தது. குறிப்பாக ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 மில்லி பாக்கெட் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் ரூ.10-லிருந்து ரூ.15-க்கும், இரண்டு லிட்டர் பாட்டில் ரூ.20-லிருந்து ரூ.25-க்கும், ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட 20 லிட்டர் கேன் குடிநீர் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேன் குடிநீரை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ஓட்டல்களுக்கு கேன் தண்ணீர் கிடைக்காததால், வாடிக்கையாளர்களுக்கு சாதாரண தண்ணீரை சாப்பாட்டுடன் வழங்கினர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூறும்போது, கேன் குடிநீரையே நம்பி கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம், இந்நிலையில் தற்போது வேலைநிறுத்தம் என்ற பெயரில் கேன் குடிநீர் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர் சங்க கூட்டம் சென்னை மைலாப்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க காப்பாளர் முரளி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொடர்வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுகுறித்து காப்பாளர் முரளி, நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் உற்பத்தி செய்யும் 103 நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடி சீல் வைத்தது. இதனை கண்டித்து மீதம் உள்ள 309 கேன் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கடந்த 15-ந் தேதி மதியத்திலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. அனைத்து கேன் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு வாங்காத நிறுவனங்களை சீல் வைக்க கூறியதை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் 103 நிறுவனங்களில் உற்பத்தியை தடை செய்து சீல் வைத்தது. கேன் குடிநீர் உற்பத்தி தொழில் சிறுதொழிலாக செய்துவருவதால் இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் தேவையில்லை. கழிவு பொருட்களையே, வேதியியல் பொருட்களையே வெளியேற்றவில்லை. மக்களை பாதிக்கக்கூடிய வகையில் எந்த செயலையும் செய்யவில்லை. மேலும் ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் வாங்கப்பட்டு அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டு வருகிறோம்.

இதுதொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் 31-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனை பயன்படுத்தி ஒரு சிலர் மெட்ரோ வாட்டரை கேன்களில் அடைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு சேவை செய்யும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள், பொதுமக்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இல்லை.

எங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். ஆனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாலும், போலி குடிநீர் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும் எங்களுடைய வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்து வாபஸ் பெற்றுள்ளோம்.

இன்று (நேற்று) இரவே குடிநீர் விநியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். அதேபோல் திங்கட்கிழமையிலிருந்து மாநிலம் முழுவதும் உற்பத்தியை நிறுத்துவது என்றும் முடிவு செய்திருந்தோம். அதனையும் கைவிடவும் முடிவு செய்துள்ளோம். மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

maalaimalar thanks

No comments:

Post a Comment