May 15, 2013 09:45 am
மத்திய பிரதேசத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி, தன் கணவரின் ஊழல்களை பட்டியலிட்டு, மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் ரமேஷ் குமார்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் தற்போது, விசாகப்பட்டினத்தில், சமூக நலத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர், ம.பி.,யில் கலெக்டராக பணியாற்றிய போது,பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும், பல துறையைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், இவரின் மனைவி சப்னா குமாரி, அம்மாநில மாநில தலைமை செயலாளர், பரசுராமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பதினாறு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், தன் கணவர் ரமேஷ் குமாரின் ஊழல் விவகாரங்களை, பட்டியலிட்டு தெரிவித்துள்ளார். ம.பியில் சம்பாதித்த லஞ்ச பணத்தில், விசாகப்பட்டினத்தில், ஆறு கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டியுள்ளதாகவும், அத்துடன், லஞ்ச பணத்தில் பெரும் பகுதியை,ஆந்திராவில்,கல்வி நிறுவனங்களிலும், மருத்துவமனைகளிலும் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த, 1999ல், ம.பி., மாநில ஐ.ஏ.எஸ்., பிரிவில் தேர்வான ரமேஷ் குமார்,அம்மாநிலத்தில், பல துறைகளில், பணியாற்றினார். அதன்பின், ஆந்திராவுக்கு இடம் மாறியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது, அவரது மனைவியே ஊழல் மற்றும் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment