அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 16 May 2013

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது


[ வியாழக்கிழமை, 16 மே, 2013, ]
பெற்ற மகளுக்கு பாலியல்
பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் தாரா, 34. இவரது கணவர் சங்கரவர்மன், 38. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

தாரா, தமிழக காங்கிரசிலும், புதுச்சேரி மாநில காங்கிரசிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். சங்கரவர்மனும் தமிழக காங்கிரசில் நிர்வாக பொறுப்பாளராக உள்ளார். 

கடந்த இரண்டு மாதங்களாக சங்கரவர்மன், தனது மூத்த மகளிடம் தகாத முறையில் நடந்து வந்தார். தந்தை என்பதால் அவரும் பொறுத்து கொண்டார். 

ஆனால் நாளாக நாளாக தந்தையின் தொல்லை எல்லை மீறியது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், தாரா வெளியூர் சென்ற நிலையில், சங்கரவர்மன், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். 

தந்தையின் தொடர் அத்துமீறல்களால் அதிர்ந்து போன மகள், தாயிடம் நடந்ததை, அழுதுகொண்டே தெரிவித்தார். கணவரின் நடவடிக்கையை கேட்டு அதிர்ந்த தாரா, பொலிஸ் கமிஷனரகத்துக்கு முறைப்பாட்டு மனு அனுப்பினார். 

முறைப்பாட்டு மனு புளியந்தோப்பு துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் சங்கரவர்மனை எம்.கே.பி.நகர் பொலிசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உறுதியானதுடன், சங்கரவர்மன் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து சங்கரவர்மன் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று மாலை கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரவர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

viyapu thanks

No comments:

Post a Comment