அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 16 May 2013

தமிழர்களின் பல ஆண்டு கால கனவு சேது சமுத்திர திட்டம் : கனிமொழி எம்.பி

[ வியாழக்கிழமை, 16 மே 2013,
தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் தலைமை தாங்கினார்.விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்கள் தி.மு.க. சார்பாக நடைபெற்று வருகிறது. சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டம்.
பண்டைய தமிழச் சமூகம், கடல் கடந்து வாணிபம் செய்த வரலாறு உள்ள சமூகம். இந்தத் திட்டம் தமிழர்களின் பல ஆண்டு கால கனவு. ஆனால் இன்று இத்திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல சக்திகள் தடுத்த வண்ணம் உள்ளன.

150 வருடங்களாக இத்திட்டத்துக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் எழுப்பாத சில சக்திகள் செயல்படுத்தப்படும் நேரத்தில் திடீரென்று  ராமர் பாலம் என்ற காரணத்தைக் காட்டி முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்படுகையில் இந்தத் திட்டத்தை உருவாக்கியதே நாம்தான். எனது முன் முயற்சியில் தான் இந்த திட்டம் உருவாகியது.
இத் திட்டம் குறித்து நான் இரண்டு முறை ராஜ்யசபையில் பேசியிருக்கிறேன் என்று பேசிய ஜெயலலிதா இன்று ராமர் பாலம் என்ற காரணத்தைக் கூறி இத்திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கலைஞருக்கு நற்பெயர் வந்து விடுமே என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஜெயலலிதா எதிர்க்கிறார். கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் மக்களால் பாராட்டப்பட்டன. இன்று அந்த திட்டங்களை அழிக்கும் வேலையில் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழகமே இருளில் மூழ்கியிருக்கிறது. மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் பெரும்பாலும் நசிந்து விட்டன. விவசாயிகள் எப்போது மின்சாரம் வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
விரைவில் மின்வெட்டு தீரும் என்கிறார். ஆனால் மின்பகிர்மானக் கழகம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில், மின்வெட்டு அடுத்த ஆண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

திடீரென்று தமிழார்வம் வந்தவராக தமிழன்னைக்கு 100 கோடி செலவில் மதுரையில் சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. ஒரு திருவள்ளுவர் சிலையையும், தொல்காப்பியப் பூங்காவையும் பராமரிக்க மறுக்கும் ஜெயலலிதா, தமிழன்னைக்கு சிலை வைப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

newindianews thanks

No comments:

Post a Comment