அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 22 June 2013

கனடாவில் வெள்ளம்: 2 லட்சம் பேர் வெளியேற்றம் (வீடியோ இணைப்பு)

[ சனிக்கிழமை, 22 யூன் 2013,
கனடாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், அப்பகுதியிலிருந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
இதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தில் கால்கரி நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் 2 லட்சம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றில் வெள்ளப் பெருக்கும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் அளவு இன்று குறையலாம்.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீடுகளின் மேற்பகுதியில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீட்புப் பணி மேலும் இரு நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நேரில் சென்று பார்வையிட்டார்.
மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதுடன், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உதவி அளித்துள்ளார்.
newsonews thanks

No comments:

Post a Comment