அமெரிக்கா: சிகாகோ நகரில் சூறாவளி காற்றுடன் பயங்கர மழை. 415 விமானங்கள் ரத்து.
14 June 2013
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நேற்று கடும் சூறாவளி காற்று வீசியது.
அத்துடன் 8 சென்டி மீட்டர் முதல் 13 சென்டி மீட்டர் வரையில் மழை கொட்டியது.
இதனால் சிகாகோ நகரின் தென்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சூறாவளி கடுமையாக சுழன்று வீசியதால் சில மணிநேரத்திற்கு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் 415 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெரிய அளவில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும், ஒருவர் லேசான காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த புயல் காற்று கிழக்கு கடற்கரையை நோக்கி நகருகிறது. இதன் விளைவாக வெர்ஜினியா, வாஷிங்டன், நியூ ஜெர்சி, பிலாடெல்பியா பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment