By ராமநாதபுரம்
First Published : 04 June 2013
பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களைக் காணவில்லை.
பாம்பன் வடக்கு கடற்கரையைச் சேர்ந்த சகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின்(45), முருகன் (35), முனியசாமி (55), செல்வம் (32), முனியசாமி (42), நல்லதம்பி (42), பூரணம் (55) ஆகிய 7 பேரும் ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய இவர்கள் திரும்பாததால் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இவர்களது உறவினர்கள் ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்களைத் தேடி மீன்வளத் துறை அனுமதி பெற்று 3 நாட்டுப் படகுகளில் ஒரு படகுக்கு தலா 7 பேர் வீதம் மொத்தம் 21 மீனவர்கள் காணமல்போன மீனவர்களைத் தேடி வருகின்றனர்.
dinamani thanks
No comments:
Post a Comment