By ராமநாதபுரம்
First Published : 04 June 2013
தேவிபட்டினம் சம்பவத்தில் போலீஸார் பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முஸ்லிம்கள் புகார் அளித்துள்ளனர்.
தேவிபட்டினம் மகளிர் மன்றத் தலைவி அஜிஸா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் அன்வர் அலி, ராமநாதபுரம் ஒன்றியச் செயலர் அகமது பசீர், மனித நேய மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டச் செயலர் யாசின், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் கதிரேசன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலர் நஜ்முதீன் உள்பட ஏராளமான முஸ்லிம் பெண்கள் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை திங்கள்கிழமை சந்தித்து அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேவிபட்டினத்தில் மே மாதம் 31 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹுசேன் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
சம்பந்தப்படாத நபர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விசாரணை என்ற பெயரில் பலரையும் போலீஸார் அழைத்துச் சென்று விசாரிப்பதையும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
dinamani. thanks
No comments:
Post a Comment