25 Jun 2013
பாட்னா:நான் விமர்சிக்க துவங்கினால் பா.ஜ.க தலைவர்கள் பலருக்கு சிக்கல்
ஏற்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.கவின் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டி தலைவராக நரேந்திரமோடி தேர்வுச்செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதாதளம் விலகியது.மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பீகார் சட்டப்பேரவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் அரசு வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் ஆட்சியில் பங்கை இழந்துள்ள பா.ஜ.க தலைவர்கள் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடாக, நிதீஷ்குமாரையும், ஐக்கிய ஜனதா தளத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் இது குறித்து கருத்து தெரிவித்த நிதீஷ்குமார் கூறியது:நான் வாய் திறந்தால் பா.ஜ.க தலைவர்கள் பலர் சிக்கலில் மாட்டுவார்கள் என்றார்.
news .thoothuonline thanks
No comments:
Post a Comment