- TUESDAY, 25 JUNE 2013 08:58
உத்தர்காண்ட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தேடுதல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு மேல் எவரும் உயிருடன் ஆபத்தான நிலையில் மீட்கப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்பதனால் தேடுதல் பணிகள் தொடரமாட்டாது எனவும் இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கெதர்நாத் பகுதியில் இனிமேல் எந்தவொருவரும் ஆபத்தான நிலையில் தங்கியிருக்க வாய்ப்பில்லை. அனைவரையும் வெற்றிகரமாக வெளியெற்றிவிட்டோம் என ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைக் குழுவின் தலைவர் ரவிநாத் ராமன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சோன் பிரயாக்கில் NDRF படையினர் மாத்திரம் நிலை கொண்டுள்ளனர். ஏனைய அனைவரும் அங்கிருந்து 25 கி.மீ தூரம் உள்ள குப்ட்காஷிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை மீட்பட்ட சடலங்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பணிகளை இனிசெய்ய வேண்டியிருப்பதாகவும் ஆனால் கெதரினாத்தில் தொடரும் கடும் மழை இன்னமும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் கடும் சவாலை எதிர்கொள்வதாகவும் த்ரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை கிடைத்துள்ள சடலங்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
news 4tamilmedia thanks
No comments:
Post a Comment