அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 13 June 2013

சென்னையில் விதிகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

சென்னையில் விதிகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை
சென்னை, ஜூன். 13- 

பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பள்ளி பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத பள்ளி வாகனங்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

தமிழகம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அரசு உத்தரவிட்டபடி மாற்றம் செய்யப்படாத பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

சென்னையிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக இது போன்று சோதனை நடத்தி பல வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

கே.கே.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் செழியன், மாதவன், ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி வாகனங்கள் சிக்கியது. அவைகளை அதிகரிகள் பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்றை ஆய்வு செய்தபோது அது கோவையில் ஓட்டுவதற்கு அனுமதி வாங்கப்பட்டது தெரிய வந்தது. 

இந்த பள்ளியின் கிளை கோவையிலும் உள்ளது. அங்கு இயக்கப்பட்டு வந்த வாகனத்தை சென்னையில் உள்ள பள்ளிக்கும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகிகளை அழைத்த அதிகாரிகள், சென்னையில் வாகனத்தை ஓட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு அதனை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல கொடுங்கையூர், மாதவரம், வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

உதாரணத்துக்கு வேப்பேரி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களை அதே பகுதியில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. வேறு பகுதியை சேர்ந்த அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்வார்கள்.

maalaimalar thanks

No comments:

Post a Comment