ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போலீஸ் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் இரண்டாம் நிலை காவலர்களாகவும், 5 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாகவும், 10 ஆண்டுகள் தலைமை காவலர்களாகவும், புகார் மற்றும் குற்றம் இன்றி பணி புரிந்தவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 தலைமை காவலர்களுக்கு சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளராகப் பதவி உயர்வு ஆணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வழங்கினார் (படம்.
இவர்களில் கமுதியில் சத்தியநாராயணன், மாணிக்கம், மண்டலமாணிக்கத்தில் முனியசாமி, ஜெயராஜ், உத்தன், பெருநாழியில் குணசேகரன், கீழத்தூவலில் முத்துச்சாமி, ஆனந்தன், சாயல்குடியில் நாகராஜன், மாயகிருஷ்ணன், சிக்கலில் புனிதன், கருப்பையா, நாகராஜ், வாலிநோக்கத்தில் கருப்பையா, ஏர்வாடியில் ஆனந்தன், மாடசாமி, குணசீலன், கருணாநிதி, உத்தரகோசமங்கையில் பரமகுருநாதன், ஜெகநாதன், கீழக்கரையில் முகம்மது காசீம், செல்வராஜ், அபிராமத்தில் பாஸ்கரன், பரமசிவம், பார்த்திபனூரில் மலைராஜ், ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் குணசீலன், மாடசாமி, ஆனந்தன், கருணாமூர்த்தி ஆகியோர் அடங்குவர்
.dinamani. thanks
No comments:
Post a Comment