- MONDAY, 24 JUNE 2013 06:35

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் மூன்று நாட்களாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பல பகுதிகளில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மலேசிய பிரதமர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவில் பரவி வரும் கடும் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் வானில் கடும் புகை மூட்டம் சூழ்ந்து சுவாசிக்கும் காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் எனும் நகரத்தில் சூழல் மாசு புள்ளி விபரம் நேற்று 507 ஆக பதிவானபோதும் அப்பகுதியில் தற்போது இதன் அளவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் போட்டிக்சன் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய கடலோரக நகரங்களில் அபாய நிலை நீடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 9 நகரங்களில் கடும் புகைமூட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் மலேசிய பிரதமர் துன் ரசாக் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார். மலேசியாவில் கடந்த 16 ஆண்டுகள் இல்லாத வகையில் புகைமூட்டத்தின் அடர்த்தி அதிகாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கோலாம்பூர் செலாங்கூர் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் முடிந்தளவு வெளி நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும் அவசியமெனில் மாஸ்க் அணிந்து செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
news 4tamilmedia thanks
No comments:
Post a Comment