அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 13 June 2013

நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசிமூலம் ஏற்றப்படும் இன்சுலில் இருந்து விடுதலை


Written by Tamil   // June 13, 2013   //
Insulin_shot_girlஉலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். இந்நோயினால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படைகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்னும் 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தின் ரோமன் ஹோவோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர். இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் கொடுக்கப்பட்டது.
அதை அவர்கள் தொடர்ந்து 4 வாரங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடமும் இந்த செயற்கை கணையம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை, என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

news.tamilstar thanks

No comments:

Post a Comment