அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 13 June 2013

வாத்தை கைது செய்த போலீசார் ஆந்திராவில் சம்பவம்


Written by Tamil   // June 13, 2013   //
ducks-3ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வாத்து ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த வாத்து தெருவில் வருவோர் போவோரை எல்லாம் கொத்துவதாக புகார்கள் எழுந்தன. கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலீஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து நுன்னா போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் அந்த வாத்தை போலீசார் கயிற்றால் கட்டி போட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மிருகங்கள் நல ஆர்வலர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று வாத்தை கைது செய்து கட்டி போட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே போலீசார் மண்டல வன அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அந்த வன அதிகாரி வாத்துக்கள் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படுவதால் அது வன இலாகா கட்டுப்பாட்டில் வராது என்று கூறி இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். இதற்கிடையே வன விலங்கு ஆர்வலர்கள் இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் உதவி கமிஷனர் நாகேஸ்வவர ராவ் நுன்னா போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். வாத்து மீது போலீசார் வழக்குபதிவு செய்திருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாத்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

news.tamilstar thanks

No comments:

Post a Comment