தோழிகளுக்கு கஞ்சா விருந்து கொடுத்த அமெரிக்க குடும்பப்பெண் மீது போதை தடை சட்டம் பாயுமா? பெரும் பரபரப்பு.
கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் உடல்நலத்தை பாதிக்கக்கூடிய அபாயகரமான பொருட்கள் என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கும் சில குடும்ப பெண்கள் இதை கொண்டு விருந்து படைக்கிறார்கள்.
ஷெரி ஷூமேன்(53) என்ற 2 குழந்தைக்கு தாயான பெண் தனது தோழிகளை அழைத்து போதை விருந்து கொடுக்கிறார். பிவெர்லி ஹில் பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் மாதம் ஒரு முறை இந்த விருந்து நடக்கிறது. கோழி இறைச்சியுடன் கஞ்சா செடி சாலெட் மற்றும் ஜூஸ் பரிமாறி அவற்றை சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
இதுபற்றி ஹூமேன் கூறுகையில், ‘இதை மருந்து போல நினைத்து உபயோகிக்கிறோம். தீராத உடல் வலியை போக்க அது நிவாரணமாக விளங்குகிறது’ என்கிறார். அந்த விருந்தில் பங்கேற்கும் 2 வயது குழந்தையின் தாயான மற்றொரு பெண்ணும் இதை நியாயப்படுத்துகிறார்
கலிபோர்னியா சட்டப்படி எந்த ஒரு பொருளையும், மருந்துக்காக உபயோகித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே இதுகுறித்து சட்டவல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment