வெள்ள நிவாரண பணிகளுக்காக அல்பெர்ட்டா அரசு முதல் கட்டமாக $1 பில்லியன் பணம் ஒதுக்கியுள்ளது.
அல்பெர்ட்டா மேயர் Alison Redford இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது ' அல்பெர்ட்டாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காகவும், சேதமடைந்த உள்கட்டமைப்பை சீர் செய்வதற்காகவும் இந்த தொகை ஒதுக்கப்பட்டதாக கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு pre-loaded debit cards வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு $1250 பணமும், குழந்தைகளுக்கு $500 பணமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த தொகையை வரும் பட்ஜெட்டில் எதிர்பாராத செலவினங்கள் என்ற வகையில் சேர்க்கப்பட்டு, ஈடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
thedipaar thanks
No comments:
Post a Comment