June 11, 2013 12:20 pm
வகுப்பு ஆசிரியையின் மடிக்கனணியை ஆராய்ந்த மாணவர்கள், அதில் அந்த ஆசிரியையின் ஆபாசப் படம் இருப்பதைப் பார்த்து அதை திருடி இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக இருப்பவர் 34 வயதான நதாலியா மொலகோவா. இவர் சம்பவத்தன்று தனது வகுப்பில் தனது மடிக் கனணியை விட்டு விட்டு அருகே போயுள்ளார்.
அப்போது மாணவர்கள் சிலர் அதனை எடுத்து எதிர்வரும் பரீட்சைக்கான கேள்வித்தாள் இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். ஆனால வினாத்தாள் கிடைக்கவில்லை.
ஆனால் ஆசிரியையின் புகைப்படம் ஒன்று கனணியில் ஒரு ஃபோல்டரில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். அந்த புகைப்படத்தில் ஆசிரியை உள்ளாடைகள் மட்டுமே போட்டிருந்தார்.
இதையடுத்து வேகம் வேகமாக அந்தப் படத்தைத் திருடிக் கொண்டனர். பின்னர் அதை இணையத்தில் போட்டு விட்டனர். இந்தப் படம் படு வேகமாக பரவி விட்டது.
இது ஆசிரியைக்கும் தெரியவந்து அவர் அதிர்ந்தார். அவமானமாக உணர்ந்த அவர் பின் பாடசாலைக்கு போகவில்லை. வேலைக்குப் போவதையே பாவம் நிறுத்தி விட்டார்.
இந்த விவகாரம் குறித்து பாடசாலை நிர்வாகம் விசாரித்து வருகிறது. பொலிஸாரும் விசாரணையில் இறங்கியுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment