அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 10 June 2013

கர்ப்பிணி மனைவியை அடைமழையில் காட்டு வழியில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த கணவர்

[ திங்கட்கிழமை, 10 யூன் 2013,
கேரள மாநில பத்தனம் திட்டா மாவட்டத்தில் கொன்னி மலை காட்டுப் பகுதியில் வாழும் அய்யப்பன் காட்டில் கிடைக்கும் தேன் மற்றும் விளைபொருட்களை விற்று இவர் குடும்பம் நடத்தி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு அய்யப்பனுக்கு திருமணம் நடைபெற்றது. தற்பொழுது 7 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவிக்கு கடந்த வாரம் கை, கால் போன்றவை பயங்கரமாக வீங்கத் தொடங்கியது.

நீர் கோர்ப்பு பாதிப்பு என்பது கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படுவதொன்றாகும்.
அந்த பெண்ணுக்கும் அவ்வாறுதான் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவரது உறவினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காவிட்டால் தாயும் சேயும் உயிர் பிழைக்க முடியாது என்று எச்சரித்தனர்.

அப்பகுதியில் சில தினங்களாக அடைமழை பெய்ததால் காட்டுப் பகுதிக்கு வரும் பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த காட்டில் வசித்த யாரும் சொந்தமாக வாகனம் ஏதும் வைத்திருக்கவில்லை.

அய்யப்பன் தனது வாரிசை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கொட்டும் மழையில் மனைவியை தோளில் சுமந்தபடி 40 கி.மீட்டர் தூரத்தை கடந்து சென்று அவரை பத்னம்திட்டா ஆஸ்பத்திரியில்  அனுமதித்தார்.

10 மணி நேரமாக மழையில் நனைந்ததால் சுயநினைவை இழந்து மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆயினும் அய்யப்பனின் "வாரிசை" டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த செய்தியை பற்றி அறிந்ததும் அய்யப்பன் தம்பதியருக்கு நல்ல உள்ளம் கொண்ட பலர் நிதியுதவி செய்து வருகின்றனர்.
newindianews thanks

No comments:

Post a Comment