அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

உடல்நிலை மோசம்:அப்துல் நாஸர் மஃதனி ஜாமீன் மனு தாக்கல்!


madani_6
பெங்களூர்:கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று கர்நாடாகா மாநில உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தனது உடல் நிலை மற்றும் நோய் விபரங்களை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்க கோரி அப்துல் நாஸர் மஃதனி தாக்கல் செய்தமனுவின் மீதான விசாரணையில், சொந்த செலவில் சிகிட்சை அளிக்கலாம் என்று கூறி மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம். கடந்த ஜனவரி முதல் 40 தினங்கள் சவ்கியா மருத்துவமனையில் மஃதனி சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால், 3 மாதத்திற்குள் மீண்டும் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை சிறை அதிகாரிகள் நிறைவேற்ற தவறினர். இதனிடையே மஃதனியை வாட்டிய நோய்கள் மீண்டும் கடுமையாகின. மிகுந்த முயற்சிகளை தொடர்ந்து நேற்று முன் தினம் மஃதனிய மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சோதனைச் செய்ய சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். ஏழு மணிநேரம் நீண்ட பரிசோதனையில் மஃதனியின் உடல்நிலை முன்பைவிட மிகவும் மோசமாக உள்ளதாக கண்டறியப்பட்டது. நீரழிவு நோயை கட்டுப்படுத்த முடியாததால் இடது கால் 90 சதவீத செயல் திறனை இழந்துள்ளது. புண் உருவாகி இடது காலை அகற்றவேண்டிய சூழல் உருவாகலாம் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதைத் தவிர ஈரலில் வீக்கம் போட்டிருப்பதால் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டுள்ளது. பூரணமாக பார்வையை இழந்த வலது கண்ணில் அவசர அறுவைசிகிட்சை நடத்தவேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அகர்வால் கண் மருத்துவமனையில் முன்னர் இரண்டு தடவை சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு தொடர் சிகிட்சை மறுக்கப்பட்டது.இவையெல்லாம் சுட்டிக்காட்டி இன்று உயர்நீதிமன்றத்தில்மஃதனி மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

thoothuonlinen thanks

No comments:

Post a Comment