அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 18 ஆயிரம் மின்மீட்டர்கள் மாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 18 ஆயிரம் மின்மீட்டர்கள் மாற்றம்
ராமநாதபுரம், ஜூன்  

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப மின் வாரியத்துக்கான வருவாயை பெருக்கவும் நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மின் நுகர்வுக்கு ஏற்ப மின்கட்டண வசூல் பணியையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக மின்கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது இதன் அடுத்த கட்டமாக மின்வாரியம் பழுதடைந்த மின் மீட்டர்களின் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. 

உதாரணமாக மின்சார மீட்டர் பழுது சரிசெய்யப்படும் வரையும், மேலும் புதிய மீட்டர் பொருத்தப்படும் வரையும் பயனீட்டாளர்கள் எவ்வளவு மின்சாரம் பயன் படுத்தினாலும் அவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக பலரும் தங்களின் மீட்டர் வேகமாக ஓடுகிறது என்பது போன்ற குறைகளை கூறி பழுதாக பதிவு செய்து அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டு குறைந்த அளவு மின்சார கட்டணம் மட்டுமே செலுத்தி வந்தனர். இதன் மூலம் மின்வாரியத்துக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மின்மீட்டர்கள் பழுது ஏற்பட்டு புதிய மீட்டர் பொருத்தப்படாமல் பயனீட்டாளர்கள் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் பழுதடைந்த மின்மீட்டர்களை உடனடியாக புதிதாக மாற்ற மின்வாரியத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு தேவையான அளவு மின்மீட்டர்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் இந்த புதிய மின்மீட்டர்களை மாற்றும் பணியில் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்படி இதுவரை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான மின்மீட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள அனைத்து பழுதடைந்த மீட்டர்களும் இந்த மாத இறுதிக்குள்ளாகவோ, அடுத்த மாதத்துக்கு உள்ளாகவே மாற்றப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மின்வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மின்வாரியத்துக்க வருவாய் கிடைப்பதோடு மீட்டர் இல்லாமல் அளவுக்கு அதிகமான மின் பயன்பாடு செய்வது தடுக்கப்பட்டு மின்நுகர்வு வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


maalaimalar thanks

No comments:

Post a Comment