வாஷிங்டன், ஜூன்.9-
அமெரிக்காவில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள், வெளிநாட்டினர் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுப்படையும், உளவுத்துறையும் இணைந்து பிரிசம் என்ற பெயரில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 9 இணையதளங்களில் இருந்து ஆன்லைன் டெலிபோன் உரையாடல்கள், இமெயில்கள், ஆடியோ, வீடியோ பேச்சுக்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டிருக்கிறது.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கலிபோர்னியாவில் ஜனாதிபதி ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒபாமா பதில் அளிக்கையில், இப்படி டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதால், தீவிரவாத தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், தொலைபேசி எண்கள், தொலைபேசியில் பேசுகிற நேரம் ஆகியவற்றை உளவுத்துறையினர் கவனித்து வருகின்றனர். யார் பேசுகிறார்கள், எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றார்.

maalaimalar thanks
No comments:
Post a Comment