அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

தங்கம் விலையில் சரிவு

.
Saturday, 08 June, 2013   01:55 PM
.
சென்னை, ஜுன் 8:தங்கம் விலை மீண்டும் உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் இப்போது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது. 
.
இன்று சவரனுக்கு ரூ.336 குறைந்தது.சர்வதேச சந்தையில் பங்கு சந்தை மீண்டும் உயர்ந்து வந்த நிலையில் தங்கத்தின் மீது முதலீடு குறையத் தொடங்கியது. இதனால் தங்கத்தின் விலை 19 ஆயிரம் ரூபாய் அளவுக்கு குறைந்தது. ஆனால் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

தங்கம் விலை ஏறிய வேகத்தில் பவுனுக்கு ரூ.336 சரிந்தது. நாட்டில் தங்கம் இறக்கு மதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்தது. நேற்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 40 அக இருந்தது. ஒரு கிராம் ரூ.2630க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை ஏறிய வேகத்தில் திடீரென  சரிந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.336 குறைந்துள்ளது.

ஒரு பவுன் 20 ஆயிரத்து 704 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.2588க்கு விற்கிறது. இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1785 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 170 ஆகவும், ஒரு கிராம் ரூ.46.20 ஆகவும் உள்ளது.  
maalaisudar thanks

No comments:

Post a Comment