அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 22 June 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் மண்ணெண்ணெய் சப்ளை குறைவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில், ரேஷன் மண்ணெண்ணெய் அளவு, பாதியாக குறைந்துவிட்டதால், கார்டுதாரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
. வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்குவதால் பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 253 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில், 3 லட்சத்து 39 ஆயிரத்து 200 பேர் மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் செயல்படும் 5 பங்க்குகள் மூலம் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மாதம் 10 லிட்டர், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 3 லிட்டர் வழங்கப்படுகிறது. சில மாதங்களாக மாவட்டத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு பாதியாக குறைந்துள்ளது. இதனால், நுகர்வோருக்கு பாதி அளவு தான் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் பங்க் மூலம் 9,818 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக 54 ஆயிரத்து 857 லிட்டர் சப்ளை செய்ய வேண்டும். ஆனால், இம்மாதம் 43 ஆயிரத்து 203 லிட்டர் மட்டுமே சப்ளையானது. இதனால் 10 லிட்டருக்கு பதிலாக 8ம், 3 லிட்டருக்கு பதிலாக ஒன்றரை லிட்டரும் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ராமாதபுரம் கூலித்தொழிலாளி சரஸ்வதி கூறுகையில், ""ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள எனக்கு, 3 லிட்டர் மண்ணெண்ணெய் கிடைத்தது. பற்றாக்குறையால், தற்போது ஒன்றரை லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. சில நேரங்களில் தாமதமாக சென்றால், அதுவும் கிடைக்காது. வெளிமார்க்கெட்டில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 45 ரூபாய்க்கு வாங்குதால் மாத பட்ஜெட் எகிறுகிறது. சமாளிக்க முடியாமல் திணறுகிறோம்,'' என்றார். மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே மாதம் 5 லட்சத்து 64 ஆயிரம் லிட்டரும், ஜூனில் 5 லட்சத்து 16 ஆயிரமாகவும் குறைத்து சப்ளை செய்யப்பட்டது. அனைத்து நுகர்வோருக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க பங்க் ஊழியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.

dinamalar thanks

No comments:

Post a Comment