சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் முத்தம் கொடுக்கும் காதலர் சிலை
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013,
சீனாவின் பிஹூ நகரில் உள்ள பூங்காவில் ஒரு இளம் காதல் ஜோடி பாடசாலை சீருடையில் முத்தம் கொடுப்பது போன்ற சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை மிகவும் தத்ரூபமாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது உண்மையிலேயே ஒரு காதலர்கள் முத்தம் கொடுப்பது போல் உள்ளது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிறுவர்களும், குழந்தைகளும் அதிகமாக வருகைதரும் பூங்காவில் இப்படிப்பட்ட அநாகரீகமான சிலை தேவையா என பெற்றோர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சிலையை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இந்த சிலையை வடித்த லியூ குயிங் 'இந்த சிலையை கலைக்கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும்.
இது காதலர்களின் இயல்பான உணர்வை ஏற்படுத்துகின்றதே தவிர ஆபாசம் ஒன்றும் இதில் இல்லை. பெற்றோர்கள் தங்களது மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சிலையால் சீனாவின் பிஹூ நகர பகுதியில் பெரும் சர்ச்சை நிலவுகிறது.
No comments:
Post a Comment