June 4, 2013 12:19 pm
தமிழகத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்ற வாலிபர் ஒருவர், ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்ததில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின், திருவனந்தபுரம் அருகே உள்ள கும்பாளம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி (வயது 27). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
சமீபத்தில் ஊர் திரும்பிய ஆண்டனி இங்குள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த ஒரு வீட்டுக்குள் ஆண்டனி நைசாக நுழைந்தார். அங்கு தனியாக இருந்த ஒரு பெண்ணை அவர் பலாதகாரத்திற்கு உட்படுத்த முயன்றார்.
இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் ஆண்டனி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பிறகு அங்குள்ள தென்னை மரத்தில் ஆண்டனி கட்டி வைத்தனர். இதற்குள் அங்கு வந்த அந்த பெண்ணின் மகன் ராஜேஷ் என்பவரும் ஆண்டனியை சரமாரியாக தாக்கினார்.
இதுபற்றி பனையோடு பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசார் அங்கு சென்று ஆண்டனியை மீட்டனர். அவர் படுகாயம் அடைந்து இருந்ததால் அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பிறகு மேல்சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டனி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதைத்தொடர்ந்து ராஜேசை பொலிசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.
இதேவேளை, பொலிஸ் விசாரணையில் ஆண்டனி அந்த பகுதியை சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோல சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
thamilan thanks
No comments:
Post a Comment