சென்னை, ஜூன் 23-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குவைத்தில் 2008-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், மன்னார்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், குவைத் அரசின் சட்டப்படி கொலையாளிகளுக்கான தண்டனையை கொலை செய்யப்பட்டவரின் பிள்ளைகள் தான் அறிவிக்க வேண்டும்.
கொலையான சித்திக் மசூதா இலங்கை தமிழ் பெண். அவர்களின் குழந்தைகள் கொலையாளிகளிடம் இருந்து ரூ.12 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொண்டு மன்னித்து விடுவதாக கூறிவிட்டனர்.
ஆனாலும், தமிழர்கள் இருவரும் விடுவிக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக குவைத் ஜெயிலில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இதை அறிந்த நாங்கள் குவைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு அதை ஒத்திவைத்தோம்.
தற்போது, அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குவைத் ஜெயிலில் இருக்கும் காளிதாசின் மனைவி அனுஷியா கூறும்போது, '8 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் குவைத் சென்றார். கொலை குற்றவாளி என 2008-ம் ஆண்டு முதல் ஜெயிலில் உள்ளார். அவரையும், சுரேஷையும் மீட்டுக்கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கண்ணீர் மல்க கூறினார்.

news maalaimalar thanks
No comments:
Post a Comment