அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 7 June 2013

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடம்: சீரமைப்பு பணி மேற்கொள்ள எம்எல்ஏ கோரிக்கை

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்ற கழிப்பிடம்: சீரமைப்பு பணி மேற்கொள்ள எம்எல்ஏ கோரிக்கை
ராமநாதபுரம், ஜூன் 5-

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் குறைபாடுகளை சீர்படுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மாநிலத்தின் பல பகுதி மக்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநில மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்நிலையில் இப்பேருந்து நிலைய இலவச கழிப்பறை சுகாதாரமற்றதாகவும், கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் உள்ளது. இங்குள்ள தனியார் உணவகங்கள் கழிவுநீரை திறந்த நிலையில் விடுவதால் சுகாதாரமற்று உள்ளது. இவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் இவற்றை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.maalaimalar thanks

No comments:

Post a Comment