நமது எண்ணங்களின் மேல் நமக்குப் பொறுப்புணர்வு இருக்கவேண்டும் என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி எண்ணங்களுக்குப் பொறுப்பேற்ற பிறகு, அவற்றின் தன்மையை நாம் ஒப்புக்கொள்வோம். அதனால் ஏற்பட்டு வருகிற நல்லது, கெட்டதுகளையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஒருவேளை நல்லதைவிட பிரச்னை அதிகமாக ஏற்பட்டால் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டும். எண்ணங்களை மாற்றுவது தொடர் முயற்சியுடன் செய்ய வேண்டிய ஒரு காரியம். ஏனென்றால் பிரச்னை தரும் எண்ணப் பதிவுகள் ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல என்பதால், ஒரே நாளில் எடுக்கவும் முடியாது. அதே சமயம், தொடர் முயற்சியால் வேறு எண்ணங்களை தன்னோடு பேசுதல் மூலம் புகுத்த முடியும். இதன் ஆரம்பம் எளிமையாக இருந்தால் தவறில்லை.
பெரும் பாறையைப் பார்க்கும் சிற்பி, அதனுள் பொதிந்து இருக்கும் உருவத்தைப் பார்க்கிறான். அந்த உருவம் பாறையில் இல்லை. அவனது மனத்தில் சிறு உரையாடல் தொகுதிகளாக, அதாவது எண்ணங்களாக இருக்கிறது. அந்த எண்ணங்களுக்குத் தொடர்ந்து வலுவூட்டுவதன் மூலம் முழு உருவமும் தெளிவாக மனத்தில் உருவாகிறது.
இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகு, எடுத்தவுடன் பாறையைப் பிளக்கும் முயற்சியில் எந்த
சிற்பியும் ஈடுபட மாட்டார். ஏதோ ஒரு ஓரத்தில் உளியால் சிறிது சிறிதாக செதுக்க ஆரம்பிப்பார். சிறிது கால உழைப்புக்குப் பின் சிலை உருவம், பாறையிலிருந்து வெளிப்படும். அது போலத்தான் வேண்டாத எண்ணப் பதிவுகளை மாற்ற, தேவையான எண்ணங்களை சிறு உரையாடல்கள் மூலம் புகுத்தத் தொடங்க வேண்டும். இவைதான் அடித்தளம்.

பல வருடங்களுக்கு முன்னால் பாரிஸ் நகரத்தில் நடந்த உண்மையான சம்பவம் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட கலையரங்கத்தில், அந்த கால கட்டத்தில் பிரபலமான இசைக் கலைஞர் பாடுவதற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விரைவில் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் நிகழ்ச்சி நடக்கப்போகும் அன்று துரதிருஷ்டவசமாக அந்த இசைக் கலைஞருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் வர முடியாமல் போனது. இதை ரசிகர்கள் மத்தியில் அறிவித்த அரங்க நிர்வாகிகள், அவருக்குப் பதிலாக, வேறு ஒருவர் இசை நிகழ்ச்சியை நடத்துவார் என்று கூறினர்.
அவரும் மிக நல்ல இசைக் கலைஞர்தான் என்றாலும், பிரபலமாகாதவர். வந்திருந்த
ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி தலைதூக்கியது. அதே மனநிலையில் புதிய இசைக் கலைஞரின் நிகழ்ச்சியைக் கேட்டனர். உண்மையிலேயே அற்புதமாக அந்த இசை அமைந்து இருந்தாலும், அவர் முடித்த பின் வழக்கமான ஆரவாரக் கூச்சல் மற்றும் பாராட்டுக்கள் ஏதுமின்றி சபை அமைதியாக இருந்தது. அந்த இசைக் கலைஞர் மகனும் அங்கே வந்திருந்து இசையைக் கேட்டான். அப்பா நிகழ்ச்சியை முடித்ததும், யாரும் எதுவும் பேசாதது பற்றி அவன் கண்டுகொள்ளவில்லை. அவன் தனியாக எழுந்து நின்று, ‘அப்பா, மிகப் பிரமாதமான இசை நிகழ்ச்சி, பாராட்டுக்கள்’ என்று உரக்கக் கூறினான். அவன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னால், மொத்த சபையும் எழுந்து நின்று கை தட்டி, தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தது. ஆரம்பம் சிறியதாக இருந்தாலும், அந்த யத்தனிப்பு தடைகளைத் தகர்ப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

வெகு காலமாக குறிப்பிட்ட முறையில் சிந்தித்தும் அதன்படி நடந்தும் வருகிறோமே என்று நினைத்து, இந்த அளவுக்குப் பழக்கமான சிந்தனையை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று மயங்கத் தேவையில்லை. மாறாக, ‘இதுவரையில் நான் நினைத்தவை தவறுதான்’ என்று ஆரம்பியுங்கள். அதன்பின் நடப்பதைப் பாருங்கள்.
நமக்குப் பிரச்னைகளை அளித்து வரும் எண்ணங்களை மாற்ற வேண்டுமானால், அவற்றை வெகுகாலம் இருந்து தொந்திரவுபடுத்தும் பிரச்னை என்று நினைத்து, அதனுடன் கூடவே இருக்கும் பயப் பதிவுகளையும் சேர்ந்தே கணக்கில் எடுக்கிறோம். அதற்குக் காரணம்,
கடந்த காலத்தை அவ்வளவு சீக்கிரம் நாம் மறப்பதில்லை. இவ்வாறு கடந்த கால பதிவுகள் நிகழ்கால பிரச்னையைத் தீர்க்க முடிவதில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.
கடந்த காலத்தை அவ்வளவு சீக்கிரம் நாம் மறப்பதில்லை. இவ்வாறு கடந்த கால பதிவுகள் நிகழ்கால பிரச்னையைத் தீர்க்க முடிவதில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.
உதாரணமாக குறிப்பிட்ட நபரைப் பற்றியோ, சூழ்நிலை பற்றியோ மனத்தில் பயம்
இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதை மாற்ற வேண்டுமென்றால், பயத்தின் அடிப்படையில், அதாவது பயந்து போயிருக்கிறோம் என்பதை அடிப்படை நம்பிக்கையாக வைத்து, புதிய தீர்வைத் தேடுவதில் பலன் இல்லை. உண்மையை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? என்ற கேள்வி நியாயமானதுபோல ஒலிக்கலாம். ஆனால் தெரிந்த விஷயத்தில் உழன்று கொண்டிருந்தால், புதிய விஷயத்துக்கு எப்போது போவோம்? பயத்தை ஒழிக்க வழி தைரியத்தைப் பற்றி சிந்திப்பதுதான். இதன் மூலம், கடந்த காலம் என்னவாக இருந்தாலும், அதை மாற்றுவதற்கு ஆரம்பித்திருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவது புதிய செய்திகள்தாம்.

அதே போல, நம்மைப் போலவே பயந்தவர்களின், பாதித்தவர்களின் உதாரணங்கள் எந்த விதத்திலும் பலன் தராது. நமக்கு எது வேண்டும், எதற்காக வேண்டும் என்பது நமது
திட்டங்களையும், தேவைகளையும் பொறுத்துதான் என்பதை மறக்கக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல நமது செயல்பாடும் மாற்றம் அடையும்.
திட்டங்களையும், தேவைகளையும் பொறுத்துதான் என்பதை மறக்கக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல நமது செயல்பாடும் மாற்றம் அடையும்.
பள்ளிக் கல்வி இறுதி வரை படித்த அனைவருக்கும் அறிமுகமானவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். அவரது நண்பர், பின்னாளில் உலக அளவில் பெரும் சாதனையாளராகவும், பணக்காரராகவும் உருவெடுத்த ஹென்றி ஃபோர்டு. இவருக்கு எப்படியாவது மோட்டார் காரை உருவாக்கி, அதை பெரிய அளவில் தயாரிக்க வேண்டும் என்ற பேரார்வம் இருந்தது. பல முறை முயற்சி செய்தும், அவர் விரும்பியதைப் போல கார் ஓடவில்லை. இவரது முயற்சிகளைப் பார்த்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ‘எதற்கு இந்த வீண் வேலை, விட்டுவிடுங்கள், பிறகு பார்க்கலாம்’ என்று கூறி ஃபோர்டை தடுக்க முயற்சி செய்தார். அவ்வாறு தனியாக முயற்சி செய்வதற்குப் பதில், தன்னிடம் வந்து வேலை செய்யுமாறும் அழைத்தார்.
ஆனால் ஹென்றி ஃபோர்டு, தனது கனவை, நனவாக்குவதற்காக தொடர்ந்து உழைத்தார். அதே போல ஒரு மோட்டார் காரை உருவாக்கியும் காட்டினார். அவரது முதல் மாதிரி கார் முன்னால் மட்டும் ஓடும். ஏனெனில் பின்னால் செல்வதற்குரிய கியர் அப்போது உருவாகவில்லை. ஆனால், அவர் நினைத்தபடி குறைந்தது நான்கு பேர் உடகார்ந்து செல்லக் கூடிய மோட்டார் காரை உருவாக்கியதில் வெற்றி கண்டார். அதன் பின்தான் பின்னால் செல்வதற்கு வேண்டிய ரிவர்ஸ் கியர் வடிவமைக்கப்பட்டு, காரில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவேன் என்ற உறுதிப்பாடு, எடுத்த காரியம் தோல்வியில் முடிந்தாலும், தொடர்ந்து இருப்பது மிகச் சிலரிடம்தான். அதனால்தான் மிகப் பெரும் வெற்றியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
பெரும் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன், ஒரு காரியம் முடியாது என்று கூறியும், ஹென்றி ஃபோர்டு விடாமல் உழைத்து வெற்றி பெற்றதற்குக் காரணம், அக்காரியம் குறித்த தனது எண்ணங்களில் உறுதியோடு இருந்ததுதான். தன்னிடம் தோன்றிய எண்ணங்களுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொண்டதால், அவற்றை அவ்வளவு எளிதில் விடத் தயாராக இல்லை. இதனாலேயே அந்த எண்ணங்கள் வலுப்பெற்றது மட்டுமின்றி அவரை வெற்றிக்கும் இட்டுச் சென்றது.
tamilpaper thanks
No comments:
Post a Comment