கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்க அமெரிக்க முடிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தங்களை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த பல்வேறான முயற்சிகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தீவிரவாதிகள் தங்கள் செயல்பாடுகளை மிக எளிதில் இணையத்தின் மூலமாக பகிர்ந்து கொள்வது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா எண்ணுகிறது.
எனவே இதனை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றை கொண்டு வந்துள்ளது.
அதாவது கூகுள் மற்றும் பேஸ்புக் பரிமாற்ற தகவல் குறித்தோ அல்லது குறிப்பிட்ட ஒரு பயனர் குறித்தோ தகவல் கேட்கும் பட்சத்தில் தரப்பட வேண்டும் என்பதே.
ஆனால் இதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் எதிர்ப்பு தெரிவித்து விட்டதால், அமெரிக்க அரசின் சார்பில் சான்பிரான்ஸிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூசன் , மனுவை ஏற்றுக்கொண்டு அரசு கேட்கும் தகவல்களை கொடுக்க வேண்டும் என பணித்துள்ளது.
இந்நிலையில் இது போன்ற சட்டங்கள் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும் என கூகுள் - பேஸ்புக் கண்டனம் தெரிவித்துள்ளது.
கூகுள் தலைமை அதிகாரி லேரி மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகியோர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், கருத்து சுதந்திரம் என்பதும் பாதுகாத்திட வேண்டும். இது வரை அரசு தரப்பிலோ , நீதிமன்றம் மூலமோ எங்களுக்கு எவ்வித உத்தரவும், ஆணையும் வரப்படவில்லை.
இவ்வாறு வரும் நேரத்தில் நாங்கள் இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம். மேலும் எங்களில் சர்வரில் உளவுத்துறையினர் நுழைய முடியாது என்றும் யாரும், கேட்டுத்தான் பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
newsonews thanks
|
No comments:
Post a Comment