அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

கற்பழிப்பு மூலம் உருவான குழந்தையை அரசு தான் பராமரிக்க வேண்டும்: இளம்பெண் மனுதாக்கல்

[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 
கற்பழிப்பின் மூலம் உருவான குழந்தையை டெல்லி அரசு பராமரிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கற்பழிப்பு சம்பவத்தின் மூலம் கருத்தரித்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் மனு செய்தார்.
கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் தற்போது அந்த பெண் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னர் பெற்றோர் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அந்த பெண் தற்போது கோர்ட் அறிவுறுத்தலின்படி பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை டெல்லி அரசுதான் பராமரிக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். எனக்கு 19 வயது தான் ஆகிறது. பெற்றோரின் ஆதரவோ, வேறு யாரின் ஆதரவோ இல்லாமல் நான் தனியாக கஷ்டப்படுகிறேன்.
எனது குழந்தையை காப்பாற்ற என்னிடம் பணம் ஏதும் இல்லை. பிரசவத்திற்கு பின் எனது குழந்தையை டெல்லி அரசு தான் காப்பாற்ற வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று அந்த பெண் கூறினார்.

newindianews thanks

No comments:

Post a Comment