- THURSDAY, 13 JUNE 2013 18:29

ஜெனீவாவில் இருந்து சர்வதேச ஊழியர் நிறுவனமான ILO தகவல் தருகையில் உலகம் முழுதும் ஜனநாயகம் பின்பற்றப் படும் நாடுகளில் சுமார் 10.5 சிறுவர்கள் அடிமைத் தொழிலாளிகளாக உள்நாட்டில் வேலை பார்த்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஜூன் 12 ஆம் திகதி குழந்தைத் தொழிலாளிகளுக்கு எதிரான உலக தினம் அனுட்டிக்கப் பட்ட போதே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் கூறப்பட்ட விபரங்கள் வருமாறு, உலகம் முழுதும் பரவலாக எங்கும் சிறுவர் தொழிலாளிகள் காணப்படுகின்றனர். அதிலும் பெரும்பான்மையினர் மூர்க்கத்தனமாகக் கையாளப் படுகின்றனர். மேலும் இந்த அறிக்கைப் படி 10.5 மில்லியன் சிறுவர் தொழிலாளிகளில் 6.5 மில்லியன் சிறுவர்கள் 5 தொடக்கம் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். மேலும் இதில் 70% வீதமானோர் பெண் சிறுமிகள் ஆவர். மேலும் சிறுவர் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சர்வதேச செயற்திட்டத்தின் இயக்குனர் தோமஸ் தகவல் தருகையில், இச்சிறுவர்கள் பலதரப்பட்ட வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப் படுவதாகத் தெரிவித்தார்.
உதாரணமாக சுத்தப்படுத்துதல், இஸ்திரி போடுதல், சமைத்தல், தோட்ட வேலை, ஏனைய குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளல், வயதானவர்களைக் கவனித்தல் ஆகிய பணிகளில் பெரும்பாலான சிறுவர்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப் படுவதாக அவர் கூறியுள்ளார். பெரும்பாலான சிறுவர்கள் தமது குடும்பச் சுமையை நீக்குவதற்காக பாடுபட்ட போதும் கணிசமான சிறுவர்கள் தமது பெற்றோரிடம் இருந்து தனிமைப் படுத்தப் பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே உடல், உள ரீதியாகப் பாதிக்கப் படுவதுடன் பாலியல் துன்புறுத்தலையும் எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே உள்ளன.
ILO இன் கருத்துக் கணிப்புப் படி உலகம் முழுதும் 18 வயதுக்குக் குறைந்த 215 மில்லியன் சிறுவர்கள் கட்டாய வேலைக்கு தள்ளப் பட்டிருப்பதாகவும் இதில் பெரும்பான்மையினர் முழுநேர வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்ததில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

4tamilmedia. thanks
No comments:
Post a Comment