அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 13 June 2013

சென்னை மெரீனா மணற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை மெரீனா கடற்கரை மணற்பரப்பில், முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை விரைவில் அகற்ற சென்னை மாநகராட்சி  நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிய வருகிறது.

சென்னை மெரீனா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இவற்றை அகற்ற உத்தரவு  பிறப்பிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

 மனுதாரர், மெரீனா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதிலுமாக ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டு குப்பைகள் வெகுவாக குவிந்து வருகின்றன. அதை அகற்றும் நடவடிக்கைகளிலும் மாநகராட்சியோ, கடை உரிமையாளர்களோ ஈடுபடுவதில்லை. எனவே மிகவும் புகழ வாய்ந்த மெரீனா கடற்கரை தற்போது அசுத்தங்களுக்கு பெயர் போனதாக விளங்குகின்றது என்றும், எனவே, மணற்பரப்பை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டு இருந்தார். மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டபோது, அவர்,

விரைவில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மெரீனாவின் மணற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி, மணற்பரப்பு துவங்குவதற்கு முன்பே, உழைப்பாளர் சிலை, மற்றும் அதற்கு அருகில் என்று இரு இடங்களில் மட்டுமே கடைகள் விரிக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சுமார் 1500 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். அதோடு, இந்த 1500 கடைகளும் ஆக்கிரமிப்புக் கடைகளாக இருக்காது என்றும், குப்பைகளை சேர விடாமல் கடை உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment