உலகில் தற்போது பரவி மிக ஆபத்தான உயிரைக் கொல்லும் வைரஸாக அறியப் படுவது MERS-CoV ஆகும்.
சிலநேரங்களில் நம்மால் அறிந்து தடுக்க முடியாத வகையில் இந்த வைரஸ் இத்தாலி நாட்டில் பரவியிருக்கலாம் என ஞாயிற்றுக்கிழமை உலக சுகாதாரத் திணைக்களமான WHO அறிவித்துள்ளது. தற்போது உலகில் இந்த நோய்த் தொற்று தாக்கியிருப்பதாக அறியப் பட்ட 53 பேரில் 30 பேர் மரணித்திருப்பதாகப் புள்ளி விபரம் கூறுகின்றது.
இந்நிலையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகள் 3 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இந்நோய்த் தொற்று ஏற்பட்டால் குறித்த நபருக்கு தடிமன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமன்றி சிலவேளைகளில் கபவாதம் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு வரை ஏற்படலாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் உலகம் முழுதுக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தல் என WHO எச்சரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2012 முதல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முதன் முறை இந்த வைரஸ் அடையாளங் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 28 ஆம் திகதி மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு விஜயம் செய்து திரும்பிய பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப் பட்டு மரணமடைந்தார், இதேவேளை தற்போது இத்தாலியில் அடையாளம் காணப்பட்ட 3 நோயாளிகளும் ஓரளவு திடகாத்திரமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

4tamilmedia thanks
No comments:
Post a Comment