தருமபுரி கலவரத்திற்கு காரணமான காதலன் மர்மமான முறையில் மரணம்: 144 தடை உத்தரவு (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013,
தருமபுரி கலவரத்திற்கு காரணமாக காதலன் இளவரசர் மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்நிலையில் திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார். நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே இன்று காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. இரண்டாம் இணைப்பு இளவரசரின் திடீர் மரணத்தால் தருமபுரியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் பொலிஸ் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment