அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 4 July 2013

பிறந்த ஒரு மணி நேரத்தில் குப்பைக்கு சென்ற பெண் சிசு

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கூரில் பிறந்து ஒரு மணி நேரத்தில் குப்பைக்கு சென்ற குழந்தையால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் உமா(25) என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை உறவினர்களிடம் கொடுப்பதற்காக அவரிடம் விசாரித்த போது தனது கணவர் ரமேஷ் வெளிநாட்டில் உள்ளதாகவும், காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்களின் தொடர்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்த ஒரு மணி நேரமே ஆன நிலையில் குழந்தையுடன் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதற்கு அங்குள்ள செவிலியர்கள் அனுமதிக்கவில்லை. பின்பு அவர்களுக்கு தெரியாமல் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் தப்பித்து விட்டார்.
இந்நிலையில் வடக்கூரில் ஒரு குப்பை தொட்டியில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. இக்குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணமேல்குடி பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் அக்குழந்தையை மணமேல்குடி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்ற குழந்தை தான் என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்தக் குழந்தையின் தாயார் கொடுத்த முகவரி உண்மைதானா, என்றும் குழந்தையை வீசிச் சென்றதன் காரணம் குறித்தும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.





newindianews thanks

No comments:

Post a Comment