July 23, 2013 09:12 am
பிரிட்டனில் இணையத்தில் பாலியல் படங்கள் வருவதை விரும்பாதவர்களின் வீடுகளில்,இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முன்கூட்டியே அவ்வாறான படங்கள் வராமல் தடுப்பதை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிரதமர் டேவிட் கேமரனே அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு வீடுகளிலும் இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் தாமாகவே பாலியல் இணையதளங்களை முடக்கிவிட வேண்டும். அப்படியான படங்கள் தமது இணையதளங்களில் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் இணையசேவை நிறுவனங்களிடம் கேட்டு அந்தத் தடையை நீக்கிக்கொள்ள முடியும்.
இதுதவிர, பாலியல் வல்லுறவைக் காட்டும் இணையதள பாலியல் படங்களை வைத்திருப்பது இங்கு இனிமேல் சட்டப்படி குற்றமாகும். ஸ்காட்லாந்தில் ஏற்கனவே உள்ள இந்த சட்டத்தை இனிமேல் இங்கிலாந்தும் வேல்ஸும் உள்வாங்குகின்றன. நாடாளுமன்றத்தில் இதுபற்றி உரைநிகழ்த்தவுள்ள பிரதமர் டேவிட் கேமரன், இணையத்தில் உள்ள பாலியல் படங்களே சிறுபராயத்தை நாசப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுவார்.
பாலியல் படங்களுக்கான இணையதளங்கள் தேவையா என்பதை தீர்மானிக்கும்படி,ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இணைய சேவை நிறுவனங்கள் இரண்டு தெரிவை வழங்கும். இரண்டு தெரிவுகளையும் தெரிவுசெய்யாதவர்களின் வீடுகளில் இயல்பாகவே குறித்த இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கும்.
thamilan thanks
No comments:
Post a Comment