அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 July 2013

வாகனத்தின் ஒலிப்பானால் நடுவீதியில் கத்திக்குத்து!

வாகனத்தின் ஒலிப்பானால் நடுவீதியில் கத்திக்குத்து!

on .
Car Horn Eu230713
இரு வாகனச் சாரதிகளுக்கிடையிலான வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது. நேற்றுத் திங்கட்கிழமை மாலை, 46 வயதுடைய ஒருவர் தனது வாகனத்தில் பரிஸ் பதினாறில் உள்ள rue Daumier இல் மாலை 17h45 அளவில் சென்று கொண்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு விளக்கில் இவர் ஒரு Mercedes SLK மகிழுந்திற்குப் பின்னால் நின்றிருந்துள்ளார். அப்போது சிவப்பு விளக்குப் பச்சைக்கு மாறியுள்ளது.

ஆனாலும் முன்னால் நின்ற Mercedes SLK மகிழுந்து புறப்படவில்லை. அதன் சாரதி தனது செல்பேசியில் ஏதோ செய்த வண்ணம் நின்றுகொண்டு இருந்தள்ளார். பின்னால் பல வாகனங்கள் தடைப்பட்டு நின்றன. இதனால் இந்த 46 வயதுடைய நபர் தனது கார் ஹார்னை (Klaxone - Horn) அழுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னால் நின்ற Mercedes SLK இன் சாரதியான 30 வயது இளைஞன் வாகனத்தை விட்டுக் கோபமாக இறங்கி வந்துள்ளான்.

வந்து ஒலிப்பானை ஒலித்தவருடன் வாய்த்தகராற்றில் ஈடுபட்டு விட்டு மீண்டும் தனது வாகனத்திற்குச் சென்று கத்தியினை எடுத்து வந்து அந்த 46 வயது நபரை மூன்று தடவைகள் குத்தி உள்ளான். அவரது காலிலும் வயிற்றிலும் தாடையிலும் பலமாகக் கத்தியால் குத்தி உள்ளான். குத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டான். உடனடியாக மற்றவர்கள் அவசர முதலுதவிச் வேவையினரை அழைக்க அவர்கள் உடனடியாக அவரை Hôpital Pompidouவின் அவசர சேவைகளின் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.

அவர் உயிர் இன்னமும் ஆபத்திலேயே உள்ளது. உடனடியாக அங்கு வந்த பரிஸ் 17 இன் காவற்துறையினர் சாட்சிகளை விசாரித்து கத்தியால் குத்தியவரைத் தீவிரமாகத் தேடினார்கள். இரவு அந்த இளைஞனே காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளார். அவர் ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப் பட்டியலில் உள்ளவர். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


eutamilar thanks

No comments:

Post a Comment