புதுக்கோட்டை மாவட்டம் இச்சடியில் மக்கள் கூடும் கடைவீதி, அரசு பள்ளிக்கூடம், கல்லூரி ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி அனைத்திந்தியபெருமன்றம், இந்தியமாதர்சம்மேளனம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கைலாசப்பாண்டியன் தலைமை வகித்தார். இந்தியமாதர்சம்மேளனம் மு.சசி துவக்கவுரையாற்றினார். இதில் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி கசி.விடுதலைகுமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாலசந்திரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
இதில் இச்சடி கிராம பெண்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் இச்சடி கிராம பெண்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், இச்சடி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் கூடும் கடைவீதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மதுஅருந்துபவர்கள் போதையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண்களையும், சாலையில் செல்லும் கல்லூரி பெண்களையும் பெண்களை கேலி செய்வதும், அதிக போதையில் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்வதும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடைவீதி பகுதிகளுக்கு பெண்கள் செல்வதற்கே பெரும் அச்சமாக உள்ளது. மேலும் ;, இச்சடி மற்றும் சுற்றுபுற கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் அருகிலேயே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிக்கின்றனர். இதனால் இங்குள்ள பெண்கள் குடும்பம் நடத்துவதற்கே பெரும் சிரமம் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு கோவில் இருக்க வேண்டும் என்பார்கள், ஆனால் இப்போது ஊருக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி விட்டது. இதனால் அப்பாவி பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றனர்.
மேலும் உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்போவதாக தொழிலாளர் சங்கத்தினரும், இச்சடி பகுதி கிராம பெண்களும் தெரிவித்துள்ளனர்.
-பகத்சிங்
news nakkheeran. thanka
No comments:
Post a Comment