July 2, 2013 01:34 pm
இராஜினாமா செய்யும்படி இராணுவம் விடுத்த இறுதி எச்சரிக்கையை எகிப்து ஜனாதிபதி நிராகரித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.எகிப்தில் கடந்த 2011-ம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக பொதுமக்கள் புரட்சி வெடித்தது. அதை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலின்படி புதிய ஜனாதிபதியாக முகமது முர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு தலைமை வகித்தவர் இவர்தான். ஜனாதிபதியாக பதவி ஏற்ற சில மாதங்களில் இவர் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கும் புதிய சட்டங்களை கொண்டு வந்தார். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து கலவரம் மூண்டது. எதிர்க்கட்சியினரும், அதிபரின் சகோதரத்துவ கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் பலியாகினர். இதற்கிடையே, முர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்ற நேற்று முன்தினம் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் மிகப்பெரிய பேரணியும்,போராட்டமும் நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கெய்ரோ, அலெக்சாண்டிரியா உள்ளிட்ட நரகங்களில் திரண்டனர். சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையும் முற்றுகையிடப்பட்டது.
போராட்டத்தினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 16 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து பேராட்டம் தீவிரம் அடைந்தது. எனவே, அதிபர் முர்சி, 48 மணி நேரத்துக்குள் அதாவது இன்று மாலைக்குள் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வெளியுறவுத்துறை மந்திரி மொகமது கமெல் ஆம்ர் உள்பட 4 மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இராணுவ மந்திரி ஜெனரல் அப்துல் பதேஎல் - சிஸ்சியும் முர்சி பதவியை இராஜினாமா செய்யும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையில் உள்நோக்கமோ, பேரமோ எதுவும் இல்லை. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பு இராணுவத்துக்கும் உள்ளது என கூறிள்ளார்.
ஆனால், இராணுவத்தின் இந்த இறுதி எச்சரிக்கையை முகமது முர்சி நிராகரித்தார். இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடையே சமரசம் ஏற்படுத்த அதிபர் முர்சி தீவிரமாக உள்ளார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் 48 மணி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியுடன் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் எகிப்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment