ரஷியாவின் வடக்கே இருக்கும் யாகுதியா பகுதியில் 11 குழந்தைகள் உள்பட 25 பயணிகள், 3 விமான சிப்பந்திகளுடன் மிக் 8 ரக ஹெலிகாப்டர் சென்றது
. அது திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில் குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ரஷ்ய அதிகாரிகள் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வ ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
news thedipaar thanks
No comments:
Post a Comment