எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்
.எந்தெந்த பிரச்னை உள்ளவர்கள் கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்யலாம்?
பெருங்குடலில் உருவாகும் சதைக்கட்டிகள், ரத்தப்போக்கு மற்றும் புற்றுநோய் கட்டிகள் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கோலோனோஸ்கோபி பரிசோதனை செய்யலாம்.
கொழுப்புள்ள உணவு உண்பது நல்லது. அது குடலின் உட்புற சுவரில் படிந்து அங்குள்ள புண்களுக்கு மருந்துபோல் செயல்படுகிறது என்கிறார்களே சரியா?
குடலின் உட்சுவர் வழுவழுப்பாகவும் மெல்லியதாகவுமிருக்கும். எனவே நாம் சாப்பிடும் உணவுகள் அத்தனையும் சுற்றியுள்ள உட்சுவரில் ஒட்டாமல் நேரடியாக உள்ளே சென்றுவிடும்.
கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு இன்சுலின் சுரக்கும் அளவில் குறைவு ஏற்பட்டால் சர்க்கரை நோய் உருவாகிறது. சில சமயம் கணையம் நீர் சுரந்து குடலில் சேரும் பாதையில் கல் உருவாகும். மேலும் குழாய் சுருங்கி பாதை அடைபட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு லேபராஸ்கோபி மூலம் சிகிச்சை அளித்து கல்லை அகற்றலாம் மற்றும் சுருங்கிய குழாயை விரிவுபடுத்தலாம்.
குழந்தைகளுக்கு குடற்புழு எதனால் உருவாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடற்புழு மருந்து கொடுக்கலாம்?
மண்ணில் விளையாடும்போது புழு முட்டைகள் கையில் ஒட்டிக்கொண்டு வயிற்றினுள் செல்லும் போது குடற்புழு உருவாகிறது. குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனையின் பேரில் குடற்புழு மருந்து கொடுக்கலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை வராமல் தடுப்பது எப்படி?
பிறந்த குழந்தைக்கு பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் தினசரி குழந்தையை சூரிய வெளியில் காண்பித்தால் மஞ்சள்காமாலை வராமல் தவிர்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும்?
பொதுவாக உணவு உட்கொண்டுவிட்டு வேலை செய்யும்போது 3 முதல் 4 மணி நேரத்திற்குள் செரித்துவிடும். உணவிலுள்ள கலோரி எரிந்து விடும். பகலில் உணவு உட்கொண்டு விட்டு தூங்கும் போது உணவு பொருளிலுள்ள கலோரி எரியாமல் கொழுப்பாக சேர்ந்து உடல் பருமனடைய வாய்ப்பிருக்கிறது. எனவே பகலில் உணவு உட்கொண்டவுடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
news dinakaran thanks
No comments:
Post a Comment