அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 July 2013

பாஜக கலவரம் -இஸ்லாமியர் கண்டனப்பேரணி!



 
காரைக்கால்: ஆடிட்டர் ரமேஷ் கொலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி, காரைக்காலில் பாஜக மாநில செயலர் அருள்முருகன் தலைமையில் இன்று நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தைத்தொடர்ந்து கலவரத்தில் ஈடுப்பட்ட பாஜக-வினரையும், வேடிக்கை பார்த்த மாவட்ட போலீசாரையும் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

இன்று பாஜக அறிவித்த கடையடைப்பை முன்னிட்டு ஒரு சில கடைகளைத்தவிர எல்லா கடைகளும் மூடியிருந்தன. மாதாகோவில் வீதியில் திறந்திருந்த ஒரு சில கடைகளையும் மூடச்சொல்லி பாஜக-வினர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அப்பொழுது தங்களது கடைகளை மூட மறுத்த ஹமீது மற்றும் நண்பர்களுக்கும், பாஜக-வினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் வருவதாகக் கூறியதுமே அனைவரும் கலைந்து சென்றனர்
இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவியதுமே, ஹமீது மற்றும் அவரது நண்பகளுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கிடசாமி தலைமையில் வந்த போலீசாருக்கும், கூடியிருந்தவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளுக்குப்பின் கடையில் உள்ள கண்ணாடிப் பெட்டிகள் உடைந்தன. அப்பொழுது கடை ஊழியர் ஹாஜா என்பவரை பாஜக மாநிலச்செயலர் அருள்முருகன் தலைமையில் பாஜக-வினர் ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோஷம் எழுப்பினர். பின்னர், சம்பந்தப்பட்ட பாஜக-வினரைக் கைது செய்வதாக போலிசார் உறுதி அளித்த பின் அனைவரும் கலைந்துச் சென்றனர்.
இதற்கிடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கிடசாமி இஸ்லாமியர்களைப் பார்த்துத் தீவிரவாதிகள் என்று பேசியதற்குக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்பு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியப்பள்ளி ஜாமிஆ மஸ்ஜித்-தில் கூடி முடிவெடுத்தப்படி இன்று மதியம் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கலவரத்தைத் தூண்டிய அருள்முருகன் மற்றும் பாஜக-வினர்கள் மீதும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கிடசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறித்தி இருந்தனர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மா, ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹமீது கொடுத்த புகாரின் பேரில் அருள்முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் நான்கு பேரைக் காவல்துறை இன்று மாலை கைது செய்துள்ளது.
இதற்கிடையில் பாஜக-வைச் சேர்ந்த பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மா-வைச் சந்தித்து, இஸ்லாமியர்கள் எங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள், ஆகையால் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்துள்ளனர்.
thanks : inneram

tmmk-ksa thanks

No comments:

Post a Comment