ராமநாதபுரம், ஜூலை. 10–
ராமேசுவரத்தில் வீட்டு பாடம் சரியாக எழுதாததால் மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது போலீசில் புகார் கூறப்பட்டது.
ராமேசுவரம் கரையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ஹரிணி (வயது9). இவர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
ஆசிரியை சுமதி மாணவியிடம் வீட்டு பாடம் எழுதிவர கூறியதாக தெரிகிறது. ஆனால் ஹரிணி சரியாக வீட்டு பாடம் எழுத வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை சுமதி, மாணவியை பிரம்பால் முதுகில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி முதுகில் காயம் ஏற்பட்டது.
நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் ஹரிணி வீட்டுக்கு சென்றார். இரவில் அவரது முதுகில் வலி ஏற்பட்டதால் அழுது துடித்தார்.
உடனே பெற்றோர் மகளிடம் கேட்டபோது ஆசிரியை பிரம்பால் அடித்ததை கூறினாள். உடனே அவளை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.
இது குறித்து ராமேசுவரம் நகர் போலீசில் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
news maalaimalar thanks
No comments:
Post a Comment