அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 10 July 2013

மண்டபத்தில் இன்று காலை தனியார் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து: 15 ஊழியர்கள் மயக்கம்

மண்டபத்தில் இன்று காலை தனியார் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து: 15 ஊழியர்கள் மயக்கம்
ராமநாதபுரம், ஜூலை. 10–
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை நிலையம் எதிரே தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை 10 மணி அளவில் அங்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. அட்டை பெட்டிகள் இருந்த அறையில் தீ பிடித்ததால் தீ மளமளவென்று பக்கத்து அறைக்கும் பரவியது. தீ பிடித்ததும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மண்டபம், ராமேசுவரம் மற்றும் இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமானது. கடல் உணவு ஏற்றுமதி நிறுவன ஊழியர் 15 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மண்டபம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, காளீஸ்வரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

news maalaimalar thanks

No comments:

Post a Comment