அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 10 July 2013

தண்டனை பெற்ற அன்றே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்துவிடுவார்கள்: உச்ச நீதிமன்றம்

)
புதுடெல்லி :  தண்டனை பெற்ற அன்றே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 


இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது என்று சட்டம் அமலில் உள்ள நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர்கள், மேல் முறையீடு செய்துவிட்டு பதவியில் தொடர்கிறார்கள்.
இந்நிலையில், இது தொடர்பான பொதுநலன் வழக்கினை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு மேல்முறையீடு செய்தவர்கள் பதவியில் தொடர அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 8 (4) வது பிரிவு  பற்றி  விமர்சனம் செய்ததோடு, இந்த சட்ட விதி ஆபத்தானதாகவும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளதாக  கூறி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இனிமேல் விசாரணை நீதிமன்றத்தால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால், அன்றைய தினமே அவர்கள் அப்பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. 
இருப்பினும் இன்றைய உத்தரவுக்கு முன்னரே,  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களுக்கு இது பொருந்தாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

.news.vikatan thanks

No comments:

Post a Comment