அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 10 July 2013

தருமபுரி இளவரசன் உடல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மறுபரிசோதனை

தருமபுரி இளவரசன் உடலை வேலூர் சி எம் சி மருத்துவமனையில் இன்று மறு பரிசோதனை செய்யப்படுகிறது. 

தருமரி இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இளவரசனது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் இளவரசனின் தந்தை, மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான் தீர்ப்பு இன்று நீதிபதிகள் தனபாலன், செல்வம் முன்னிலையில் வந்தது. இதற்கிடையில்,  இளவரசன் உடலை தருமபுரி மருத்துவமனையில் செய்த பிரேத பரிசோதனையின்  வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிக்கள், இளவரசனது தந்தை, இரு தரப்பு வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கறிஞர்கள் வாதாடலாம் என்றும், இரு தரப்பு வாதங்கள், மற்றும் வீடியோ காட்சிகளை மனதில் வைத்து, நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்கிற நிலை வந்தது. இதன் அடிப்படையில்  இன்று  முற்பகல் தீர்ப்பு வழங்கிய  நீதிபதிகள், தனபாலன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் இளவரசனது உடலை வேலூர் சி எம் சி மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment